பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களிலும் இந்தியாவுக்கு செல்லும் விமானங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
லாகூர் விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், மறு அட்டவணை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான கூடுதல் தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கேட்டுக் கொண்டது.