இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரியான கபூரியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரும் அள்வானையை பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் (கபூரி) அவர்கள் இன்று (12) மள்வானையில் காலமானார்.
இஸ்லாமிய சமூக நற்பணிகளில் மிக நீண்டகாலம் உழைத்துள்ள அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் அவர்கள் பாடசாலை ஆசிரியராகவும் காதி நீதிபதியாகவும் அஹதியா சன்மார்க்க பீடத்தின் பாடத்திட்ட பணிகளில் ஈடுபடுகின்ற ஒருவராகவும் தன்னுடைய சமூக பணிகளில் தொடர்ந்த அதேவேளை கபூரியா அரபுக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் அதிபராகவும் அதற்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளின் போது அதனை பாதுக்காக முன்னின்று உழைத்த ஒருவராகவும் செயற்பட்டு வந்தார்.
மக்களோடு மிகவும் இங்கிதமாக பழகக்கூடிய ஒருவராக அடையளப்படுத்தக்கூடிய அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் அவர்களுடைய ஜனாஸா இன்று மாலை மள்வானையில் அடக்கம் செய்யப்பட்டது.
இவருடைய மறைவையொட்டி கபூரியா பழைய மாணவர் சங்கம் அனுதாபம் வெளியிட்டுள்ளது.