புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர்.
புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21 உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.
போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது.
இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.
அதன்படி, இன்றும் 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. We have a pope என வாடிகனில் உள்ள தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்ந்தெடுத்தனர்