புதிய கொவிட்-19: வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகள்..!

Date:

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலைகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாவது,

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பி.சி.ஆர். பரிசோதனை வசதிகளுள்ள வைத்தியசாலைகள், தற்போது இந்தச் சோதனைகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

வைத்தியசாலைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பிலான கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் சிலவற்றில் தற்போது பரவிவரும் புதிய கொவிட் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

ஆனால், உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...