அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதற்கென தகுதிப்பெற்றுள்ள 14 இலட்சத்து 23,895 குடும்பங்களுக்கென ரூ. 11, 274 மில்லியன் நிதி வங்கி கணக்குகளில் இவ்வாறு வைப்பிலிடப்படவுள்ளது.