யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்: இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை

Date:

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

சுயேட்சைக்குழு இலக்கம் 1  – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

சுயேட்சைக்குழு இலக்கம் 2  – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...