‘முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்’: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்

Date:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  ஹிமான்ஷி நர்வால், முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும், என்று கூறினார். ​

கடந்த ஏப்ரல் 22ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில், வினய் நர்வாலும் ஒருவர்.

திருமணமாகி ஒருவாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருந்தார். தேனிலவுக்காக அவர்கள் சென்றிருந்த நிலையில், துப்பாக்கிதாரிகள் வினய் நர்வாலை சுட்டுக்கொன்றனர்.

Popular

More like this
Related

குழந்தைகளின் அனுமதி பெறாமல் தொடுவது தவறானது: ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ குறித்து மருத்துவர் துஷாரா விக்கிரமநாயக வலியுறுத்தல்!

குழந்தைகளுடனான உடல்தொடர்பு குறித்த உரையாடல்களில் அவர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட...

அமெரிக்கா – ஈரான் போர் குழப்பங்களுக்கு மத்தியில் அச்சுறுத்தும் ஐசனஹோவரின் 60 ஆண்டுக்கால எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கோல் (Dan Driscoll) எதிர்பாராத விதமாகப்...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான...

சில மாவட்டங்களில் இன்று மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல...