புத்தளம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வக்பு சொத்துக்களை கையாளுவதற்கு வக்பு சபையால் விசேடமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு (01) நம்பிக்கையாளர் சபை தலைவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
புத்தளம் பெரியபள்ளிவாலுக்கு வக்பு செய்யப்பட்ட கடைகளை வாடகைக்கு பெற்றவர்களில் சிலர் வக்பு சொத்துக்களை மோசடி செய்ததாக வெளிவந்த குற்றச்சாட்டுக்களையடுத்து வக்பு சொத்துக்களை கையாளும் பணி கடந்த வருடம் விசேட நம்பிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வக்பு செய்யப்பட்ட கடையென்றை வாடகைக்கு பெற்றிருந்த ஒருவராலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.