இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு புத்தளம் நீர்ப்பாசன பொறியியல் அலுவலக வளாகத்தில் கடந்த மே 29ல் நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர், திருமதி, டி.எஸ்.என். ஜெயமான்ன தலைமையில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வத உரைகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் புத்தளம் புனித மேரி தேவாலயத்தின் மீசம் அருட்தந்தை திலங்க நிர்மான் , ஹிந்து கோயிலின் குருக்கள் மற்றும் சர்வ மத குழு உறுப்பினரும் பஹன மீடியாவின் இயக்குனருமான அஷ்ஷேக். எம்.எஸ். அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் ஆசிச் செய்திகளை வழங்கினர்.
நிகழ்வின்போது நீர்ப்பாசனத் திணைக்களம் கடந்த 125 ஆண்டுகளில் நாட்டிற்கு வழங்கிய முக்கியமான சேவைகள் நினைவுகூரப்பட்டதுடன், திணைக்களத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பும் நினைவு கூறப்பட்டது.
இஸ்லாம் சார்பாக உரையாற்றிய அஷ்.அப்துல் முஜீப் , இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நீர்ப்பாசனத் துறை ஒரு பொறுப்பு, நிலத்தை வளப்படுத்தாமல் வைப்பது குற்றம், அதனை வளப்படுத்துவது தர்மம், மன்னர்கள் காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் நெல் உற்பத்தியில் சிறந்து காணப்பட்டமை ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.
125வது ஆண்டு நிறைவு நினைவாக, அன்றிரவு முழுவதும் புத்தளம் கல்லடி விகாரையின் விகாராதிபதி கெளரவ நவகமுவே மேதானந்த தேரர் தலைமையில் பிரித் ஓதும் நிகழ்வு நடைபெற்றது.
இவ் வழிபாட்டு நிகழ்ச்சியில், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
125 வருட நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந் நிகழ்வில், நீர்ப்பாசன இயக்குநர் ஜெனரல் பொறியாளர் ஏ. குணசேகர, மேலதிக இயக்குநர் ஜெனரல் பொறியியலாளர் ஏ.கே. சந்திரலதா, புத்தளம் பிரிவு தலைமை பொறியியலாளர் ஆர்.எம்.ஏ.ஆர். பண்டார, பொறியியலாளர் ஜெனரல் ஜே. பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், பொறியாளர் எஸ்.கே.ஏ.எஸ். சதுரங்க, எம்.என்.என். சுஜாவ், ஜே.ஏ.சி.எல். ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.