வர்த்தகம், விவசாயம், சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் – சபாநாயகருடனான சந்திப்பில் ஆராய்வு

Date:

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார்  (Reuven Javier Azar), சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய சபாநாயகரின் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

சுற்றுலா, விவசாயம், விஞ்ஞானம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு மற்றும் மருத்துவத் துறைகள் உள்ளிட்ட பிரதான துறைகளில் இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதன் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பௌத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, அதன் போதனைகள் உலக அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்கு எந்தக் காலத்துக்கும் பொருத்தமானது  எனத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் இலங்கைக்கான துணைத் தூதுவர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...