20,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; ஏழு பேர் உயிரிழப்பு

Date:

வருடத்தின் ஐந்து மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, இக்காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்  விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...