2025 உள்ளூராட்சி தேர்தல்: நாடு முழுவதுமான இறுதி முடிவுகள் வெளியாகின

Date:

2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி  4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளுடன் (21.69%) 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்தக் கட்சி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 02 நகர சபைகள் மற்றும் 11 பிரதேச சபைகள் அடங்கும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 954,517 வாக்குகளைப் (9.17%) பெற்று, 742 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி 488,406 வாக்குகளைப் (4.69%) பெற்று 381 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது.

இலங்கைத் தமிழ் அரசு கட்சி 307,657 வாக்குகளைப் (2.96%) பெற்று 377 இடங்களைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி 37 சபைகளில் முன்னிலை வகிக்கிறது.

இதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் அடங்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 116 இடங்களைப் பெற்றுள்ளது.

02 நகர சபைகள் மற்றும் 03 பிரதேச சபைகள் உட்பட 05 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதே நேரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி 300 இடங்களையும் சர்வஜன அதிகாரம் 226 இடங்களையும் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...