4 மாகாணங்களில் பிற்பகலில் மழை

Date:

இன்றையதினம் (10) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

மேல் மாகாணத்திலும், புத்தளம், காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...