48 மணிநேரத்தில் பலியாகப்போகும் 14,000 குழந்தைகள்: காசாவிற்குள் நுழைய சுமார் 100 உதவி லாரிகளுக்கு மட்டுமே அனுமதி;

Date:

காசா பகுதிக்குள் சுமார் 100 மனிதாபிமான உதவிகளைக் கொண்ட லாரிகள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்க் இந்த தகவலை வெளியிட்டார்.

“இது, நேற்று நுழைய அனுமதிக்கப்பட்ட ஒன்பது லாரிகளுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய முன்னேற்றமாகும்,” என அவர் தெரிவித்தார்.

இந்த லாரிகளில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் சத்தான உலர் உணவுகள் அடங்கியுள்ளன என்றும், அவை அடுத்த கட்டமாக சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள  அமைப்புகள் வழியாக காசா மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த முன்னேற்றம், தொடர்ந்த மனிதாபிமான நெருக்கடிக்குள்ளாகியுள்ள காசா மக்களுக்கு தற்காலிக நிம்மதியாக அமையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

முன்னதாக காசாவுக்கு தினமும் 500 லாரிகளின் மனிதாபிமான அடிப்படையில் பொருட்கள் காசாவுக்குள் சென்றன. ஆனால் இப்போது லாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தள்ளது.

இதனால் காசா மக்கள் உதவிகள் இன்றி தவித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பசி, பட்டினியால் வாடுகின்றன. சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன.

இதுபற்றி காசாவில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‛‛எங்கள் குழந்தைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்கவில்லை. அரிசி, மாவு, காய்கறிகள் என்று எந்த உணவு பொருட்களும் எங்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது” என்றார்.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்றைய தினம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.   காசாவுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சென்றடையாவிட்டால் அங்கு 14 ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...