2026 FIFA உலகக் கோப்பையில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (07) பல அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் FIFA தலைவர் கியானி இன்பான்டினோவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன் போது பலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் உலகக் கோப்பையில் கலந்துகொள்வது குறித்து கவலைப்பட வேண்டுமா என்று கேட்டபோது,
அமெரிக்காவில் 2026 உலகக் கோப்பையின் போது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தடை செய்யப்படாது என்று டிரம்ப் விளக்கினார்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.
2026 FIFA உலகக் கோப்பை 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19, வரை நடைபெறும்.
இந்தப் போட்டி அமெரிக்காவிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.