இமாம் கல்லூரி: மனித வள அபிவிருத்தி துறையில் மற்றொரு மைல் கல்லை நோக்கி ஸம் ஸம்!

Date:

ஒரு தாசப்த காலத்தைத் தாண்டி இலங்கையில் மனிதாபிமான பணிகளையும் சமூக நலத்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற நாட்டு மக்களின் நிதியை மட்டுமே கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸம் ஸம் பவுண்டேஷன் நேற்றுமுன்தினம் (20) தன்னுடைய பிரதான பணிகளில் ஒன்றான இனாயா கார்டன் திட்டம் முடிவடைவதை முன்னிட்டும் மனித வள முன்னேற்றத் துறையில் மிகவும் தேவையாக உள்ள ‘கொமியூனிட்டி இமாம் கொலேஜ்’ திட்டத்தை அங்குராப்பணம் செய்யவதற்காகவும் ஏற்பாடு செய்த ‘சுக்ரன் நைட்’ விருந்துபசார வைபவம் தெஹிவளை ஈகில்ஸ் லேக் ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஸம் ஸம் பவுண்டேஷனுடைய தலைவர் அஷ்ஷெக் யூசுப் முப்தி ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக நாடறிந்த இஸ்லாமிய அறிஞர் ஜாமிஆ நளீமியாவின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் அவர்கள் கலந்துகொண்டார்.

ஸம் ஸம் பவுண்டேஷனுடைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நாடு முழுவதுமுள்ள ஸம் ஸம் பவுண்டேஷனுக்கு ஆதரவு வழங்குகின்ற பரோபகாரிகள், தனவந்தர்கள், புத்திஜிவிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

பல்வேறு சவால்களைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் அதனுடைய பிரச்சினைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்துக்காக உழைக்கின்ற ஆசிரியர்கள் அதிபர்கள் உலமாக்களை திறன் விருத்தியுடனும் விழுமியங்களுடனும் கூடிய தேசத்திற்கு பணி செய்வதற்குரிய தேவைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களுடன் பயிற்றுவிப்பதும் வழிநடத்துவதுமே இன்றைய முதன்மையான தேவை என்பதை ஸம்ஸம் பவுண்டடேஷன் அடையாளம் கண்டு கடந்த 6 வருடங்களாக இனாயா கார்டன் திட்டத்தின் ஊடாக மேற்கொண்டு வருகின்ற மனித வள அபிவிருத்தி பணியின் அடுத்த கட்டமாக ‘இமாம் கல்லூரி’ என்ற புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்களும் அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களும் விசேடமாக இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்கள்.

முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற பின்னடைவுகள் பல்வேறு வகையான விழுமியம் ஒழுக்கம் சார்ந்த குறைபாடுகளுக்கு எல்லாம் பொருத்தமான சகல பயிற்சிகளையும் பெற்ற ஆளுமை விருத்திக் கொண்ட ஆன்மீக பக்குவம் கொண்ட சமூகத்தினதும் தேசத்தினதும் சூழலை சரியாகப் புரிந்துகொண்ட பாடசாலை தலைவர்கள், பள்ளிவாசல் இமாம்கள், மத்ரஸா அதிபர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆழமாக விளங்கயதன் விளைவுதான் இத்தகைய திட்டங்களை ஸம் ஸம் பவுண்டேஷன் அங்குரார்ப்பணம் செய்ய பிரதான காரணமாக அமைந்திருக்கிறது என்பதனை ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவர் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெளிவுபடுத்தினார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...