இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் தீக்காயங்களுடன் போராடும் ஒரு சிறுமியை மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, உலகெங்கும் மக்களின் மனதை உருக்கியுள்ளது.
இந்த தாக்குதல், காசா நகரின் அல்-தராஜ் பகுதியில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பளித்து வந்த ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளியில் நடைபெற்றது.
தீக்காயங்களுடன் கிடக்கும் சிறுமியை தூக்கி எடுத்து மருத்துவ உதவிக்காக விரைந்த காட்சி அருகிலிருந்த மற்றவர்களின் கதறல், இவை அனைத்தும் மனதை நெகழவைக்கும் காட்சியாக உள்ளது. போர் என்பது எதற்கு என்று தெரியாத குழந்தைகளின் வாழ்வைக் கிழித்தெறிகிறது.
உலகம் இன்னும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஊடகங்கள் இத்தாக்குதலை “மனிதாபிமான விதிகளை மீறிய நடவடிக்கை” எனக் குற்றம் சாட்டியுள்ளன.