இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

Date:

சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெறும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர்  விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் எதிர்வரும் மே 29 முதல் 31, 2025 வரை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தவிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

இஸ்ரேலிய அரசு காசாவில் இரண்டு வருடங்களாக போர் நிறுத்த விதிமுறைகளை மீறி, அப்பாவி பொதுமக்களை கொன்று வருகிறது.

193 நாடுகளின் எதிர்ப்பை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத யுத்தத்தினால் குழந்தைகளும்,பெண்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இஸ்ரேலிய திரைப்பட விழாவை நடத்துவது, இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும்.

இது, பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடாகவும், மனிதநேயத்திற்கு எதிரான செயலாகவும் அமையும். தமிழ்நாடு, வரலாற்று ரீதியாகவே அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் ஆதரித்து வந்துள்ளது.

இந்த விழாவை அனுமதிப்பது, தமிழ்நாட்டின் இந்த மாண்புமிக்க பாரம்பரியத்திற்கு மாறான செயலாக இருக்கும். மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகள் மற்றும் மக்களுக்கு உள்ளது.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், இஸ்ரேலின் அநீதியான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது நமது தார்மீக கடமையாகும்.

இவ்விழா நடைபெறுமேயானால், மே 29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பரிப்போம் எனவும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...