உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நிறைவு

Date:

மே மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் தமிழ்நாடு திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இனிதே நிறைவுற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸடாலின் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் உள்ள பேராளர்களும் இலக்கியவாதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்  காயல் மகபூத் அவர்களுக்கு அவருடைய இலக்கிய பணிகளுக்காக இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான கே.என். பாஷா, ஜி.எம். அக்பர் அலி  ஆகியோர் இவ்விருதை வழங்கினார்.

இம்மூன்று நாள் மாநாட்டில் முஸ்லிம் மீடியோ போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...