இலங்கைக்கு-எகிப்துக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த உறுதிப்பாடு

Date:

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு எகிப்திலிருந்து போட்டியிடும் (கலாநிதி) காலித் எல். எனெனி இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களை அண்மையில் (05) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கும், எகிப்துக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, பரஸ்பர இரு தரப்பு உறவுகள் இச்சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிடும் நபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நோக்கத்தை வெளிப்படுத்திய கலாநிதி காலித் எல். எனெனி, நாடுகளிடையே கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் எகிப்துடன் காணப்படும் நீண்டகால உறவுகள் குறித்து பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...