பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலுள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்குவதற்கு அசாம் மாநிலம் தீர்மானித்துள்ளது.
சுதேச மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தெரிவித்தார்.
அசாமின் 35 மாவட்டங்களில் 11மாவட்டங்களில் முஸ்லிம்கள் செறிந்து வழ்கின்றனர். அவற்றுள் 4 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் இருக்கின்றன. தற்போது 6 மாவட்டங்களில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுதம் வைத்திருப்பதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சுதேசிகளின் நீண்டகால கோரிக்கைக்கு பின்னர் இந்த ஆயுத லைசென்ஸுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் எல்லைக் கிராமங்களில் பங்களாதேஷிலிருந்து குடியேறிய அநேகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.