இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பஃப்ரல் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
“மே 3, 2025 முதல் அமைதியான காலத்திற்குப் பிறகும் கூட, பிரதமர் அமரசூரிய தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை நாங்கள் கண்காணித்துள்ளோம்.
பிரதமரின் இந்தக் கருத்து, அவரது ஆதரவாளர்களை தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்,” என்று PAFFREL நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.