நாட்டின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு: 29, 000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தங்களிடம் ஆளனிப் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து மின்தடைகளை சீர் செய்துவருவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை மின்சாரசபை, மின்தடைகள் ஏதாவது ஏற்பட்டிருநு்தால் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்தடைகளை வெகுவிரைவில் சீர்செய்யும் அதேவேளை, பொதுமக்கள் பொறுமைகாத்து தமக்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...