பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்.

மின்னஞ்சல் தொடர்பாக கூகுளிடம் இருந்து அறிக்கை கோரியுள்ளோம்.எங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளது. மின்னஞ்சலின் ஐபி முகவரி நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாது.

இது தொடர்பான முறையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கையைப் பெற்ற பின்னர், நாங்கள் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைப்போம்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பது குறித்து, ஆகஸ்ட் 2024 இல் அமைச்சின் அவசர தொலைபேசி எண் மூலம் முறைப்பாடு பெறப்பட்டது.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘லோகு பட்டியின்’ கூட்டாளி ஒருவர் செய்து வருவதாக முறைப்பாடு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த முறைப்பாடு குறித்தும் நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தகவல் அளித்தவர் அளித்த உண்மைகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. முறைப்பாடு அளிக்கப்பட்ட மொபைல் எண்ணிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பான உண்மைகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...