புதிய பாப்பரசர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தயங்கும் நெதன்யாகு:’கைது செய்யப்படலாம்’ என்ற அச்சமே காரணம்..!

Date:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்டுள்ள கைது உத்தரவைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதிய பாப்பரசராக தெரிவாகியுள்ள ரொபர்ட் பிரீவோஸ்டின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை தவர்ந்துகொள்ளவிருப்பதாக இஸ்ரேல் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை 17 ஆவது ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசராக பதவியேற்கவுள்ள நிலையில் உலகின் பல தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இச்சூழ்நிலையில் இத்தாலியுள்ள பாப்பரசர் அலுவலகத்துடன் தொடர்புகொண்ட இஸ்ரேல் நெதன்யாகு அலுவலகம், நெதன்யாகுவின் நீதிமன்ற விடயத்தில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு செயற்படுத்தப்படுமா அல்லது பாதுகாப்பு முறையில் கலந்துகொள்ள முடியுமா என்ற விடயங்கள் கேட்கப்பட்டபோது இத்தாலி சார்பில் முறையான திருப்திகரமான பதில் வழங்கவில்லை இதனால் இந்த பதவியேற்பு வைபத்தில் கலந்துகொள்ள முடியாது என நெதன்யாகு அலுவகம் தெரிவித்துள்ளது.

ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசராக 17ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். அவர் தனது முதலாவது உரையை மே 21 ஆம் திகதி நிகழ்த்துவார்.

புதிய பாப்பரசர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கவுள்ள நிலையில், ஐரோப்பியாவில் கிறிஸ்தவ மதம் எதிர்கொள்கின்ற வீழ்ச்சியும், தேவாலயங்களுக்குள் இடம்பெறும் குற்றச்சாட்டுகளும், குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோக விவகாரங்களும், அவருக்கு பெரும் சவாலாக இருக்கின்றன.

2024 நவம்பர் 21ஆம் தேதி காசா மீது மேற்கொண்ட தாக்குதலின் போது, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு ICC கைது வாரண்டுகள் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஐசிசி உறுப்பினராக இல்லாத போதும், பலஸ்தீனம் அதன் உறுப்பினராக இருப்பது சர்வதேச சட்ட ரீதியில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...