கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதையடுத்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.
70 நாடுகளைச் சேர்ந்த 133 கர்தினால்களும் அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மிகப்பெரிய மாநாட்டிற்காக ரோமில் கூடியுள்ளனர்,
வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய ஆலோசனை மாநாடும், வாக்கெடுப்பும் இன்று புதன்கிழமை (07) நடைபெறுகின்றது.
இந்நிலையில், வத்திக்கானில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படவுள்ளது. சிஸ்டைன் தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலைபேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கர்தினால்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
மூன்று நாட்களுக்கு பின்னரும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என்றால் வாக்காளர்களான கர்தினால்கள் சிந்திக்க நேரம் ஒதுக்குவதற்காக வாக்குப்பதிவு 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை மக்கள் அறிக்கை வாயிலாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ தெரிந்துக்கொள்ள முடியாது.
மாறாக சிஸ்டைன் தேவாலயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும்.
புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானல் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் கிடைத்து விட்டார் என்றும் அர்த்தம். போப் தேர்வு செய்ய கார்டினால்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும். இந்த நடைமுறை 15- ஆம் நூற்றாண்டிலிருந்து