போலந்து வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

Date:

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski), இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை இலங்கை வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வரவேற்றார்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைத்துவத்தை வகிக்கும் போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் உத்தியோகப்பூர்வ சந்திப்பை நடத்த உள்ளார்.

இந்த விஜயத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும், மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து  வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்பதோடு இலங்கையின் பல்வேறு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...