முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு!

Date:

நாட்டில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை சனிக்கிழமை (24) வழங்கப்படவுள்ளன.

இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் தாதியர் சேவை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாளைய நிகழ்வு வேளையில் தாதியர் சேவையில் 79 சிறப்புத் தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...