இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களின் ‘மனச் சாட்சி’ நூல் வெளியீடு!

Date:

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு விடயப்பரப்புகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய ‘மனச் சாட்சி’ எனும் பெயரிலான நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொள்ளும் ஓய்வுபெற்ற சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாலித பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோர்  நூல் குறித்த உரையை நிகழ்த்துவர்.

அன்றைய தினம் நூல் வெளியீட்டாளரான புத்தி வெளியீட்டகத்தினரால் விசேட சலுகை விலையில் நூலை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(அஷ்ரப் ஏ.சமட்)

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...