இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இலங்கை செவிலியர் காயம்

Date:

தெற்கு இஸ்ரேலின் மிகவும் பரபரப்பான வைத்தியசாலையான சொருகா வைத்தியசாலை, ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை நாங்கள் தற்போது மதிப்பிடுகிறோம். இந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்வதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...