இஸ்ரேலில் இருந்து இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

Date:

இஸ்ரேலில் இருந்து இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று 3 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை எகிப்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திரும்ப உதவுமாறு மேலும் 12 இலங்கையர்கள் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கான விமானங்களை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய அரசு அறிவித்துள்ளது.

 

இந்திய பிரஜைகளை திருப்பி அனுப்புவதற்காக ஜோர்தானிலுள்ள உள்ள அம்மான் விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு பல விமானங்களை இந்திய அரசு இயக்கி வருகிறது. இந்த விமானங்களில் பல இலங்கையர்களுக்கு இருக்கைகளை ஏற்பாடு செய்யலாம் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எமது வெளிவிவகார அமைச்சு இந்த விமானங்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைய இந்த வழித்தடத்தில் பயணிக்க விரும்புவோர் இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்படுவர்.

ஜோர்தானிலுள்ள உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டில்லியிலுள்ள உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இலங்கை  பயணிகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இடம்பெற்று வரும் மோதல், ஹோட்டல் துறையில் பணிபுரியும் இலங்கையர்களின் பணிகளை கடுமையாக பாதித்துள்ளது.

தற்போது நிலவும் மோதல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் ஹோட்டல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் அத்துறையில் பணிபுரியும் பல இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாக்கடல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்பட்டுள்ளது, மேலும் 15 இலங்கை தொழிலாளர்களை வேறு ஹோட்டலுக்கு மாற்றப்பட வேண்டியிருந்தது. இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் எவரும் தங்கள் நிலைமையை இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

நடந்து வரும் மோதல் காரணமாக இஸ்ரேலுக்கான பயணத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தற்போது இலங்கையில் உள்ள இஸ்ரேலுக்குத் திரும்ப விரும்பும் இலங்கையர்களிடமிருந்து எங்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  எவ்வாறிருப்பினும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவை மதித்து பின்பற்றுமாறு தூதுவர் நிமல் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...