மத்தியக் கிழக்கில் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இலங்கையர் இருவர் காயம்: பாதுகாப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கண்காணிப்பு

Date:

இஸ்ரேலின் பினீ பிராக்கில் (Bnei Brak) பணிபுரியும் இலங்கையர் இன்று (16) அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதர் நிமல் பண்டார, காலில் காயம் அடைந்த  சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

காயமடைந்தவர் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கட்டுமானத் துறையில் பணிபுரிபவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேநேரம், ஈரான் நடத்திய இரவு நேரத் தாக்குதல்களில் இஸ்ரேலின் பாட் யாமில் வசிக்கும் பெண் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இரு நாடுகளிலும் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர் எவருக்கும் பாதுகாப்பில் பிரச்சினை இருந்தால், தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் சிரமம் உள்ள உறவினர்கள், அது குறித்து வெளியுறவு அமைச்சிடம் விசாரிக்கலாம் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...