இஸ்ரேலில் வசிக்கும் 20,000 இலங்கையர்கள், ஈரானின் தேயிலை ஏற்றுமதிக்கான பாதிப்பு குறித்துப் பேச அரசாங்கம் அனுமதிப்பதில்லை – எதிர்க்கட்சிகள் இணைந்து குற்றச்சாட்டு

Date:

எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக அவர்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உருவாகியுள்ள யுத்த சூழ்நிலையின் போது எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பிரச்சினைகள் சிலவற்றை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இன்று (17) பாராளுமன்றம் கூடிய வேளையில் சபாநாயகரிடம் நேரம் கேட்டிருந்தார், ஆனால் வழக்கம்போல சபாநாயகர் அந்த கோரிக்கைக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

நெருக்கடிச் சூழலில் இஸ்ரேலில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் ஈரானின் தேயிலை ஏற்றுமதிக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் உலக அமைதிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலைமையும் உருவாகியுள்ளது, இந்த நிலைமை குறித்து அரசாங்கத்தின் பதிலை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளின் கருத்தாக இருந்தது.

ஆனால்,  சபாநாயகர் அதற்கு வாய்ப்பு வழங்குவதை தொடர்ந்து மறுத்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு உள்ள உரிமை இதன்மூலம் மீறப்படுகிறது.

10வது பாராளுமன்றத்தில் தற்போதைய சபாநாயகரின் இவ்வாறான தொடர் நடவடிக்கை சாதாரண விடயமாக மாறிவிட்டது என்று இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

சபாநாயகர் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அவர்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதற்கு வாய்ப்புகளை வழங்கி செயற்படுவதும், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் அவர்களுக்கு கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்காததும் பாராளுமன்ற மரபுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சியின் பிரதி முதற்கோலாசான் அஜித் பி. பெரேரா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தேசிய அளவில் முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியின் பங்களிப்பு குறித்து கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர் குழு இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...