கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் றிஸா சரூக்: முஜிபுர் ரஹ்மான் தகவல்

Date:

கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக ரீஸா சரூக் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில்  ஞாயிற்றுக்கிழமை (01)  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது

கொழும்பு மாநகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சிமன்ற ஆணையாளரால் சபை கூட்டப்படும் தினம் அறிவிக்கப்படும்.

அவ்வாறு சபை கூட்டப்படும் தினத்தில் மாநகர மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பினை நடத்த வேண்டியேற்படும்.

எந்தவொரு கட்சிக்கும், சுயேச்சை குழுவுக்கும் 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் இன்மையால் வாக்கெடுப்பின் மூலமே தெரிவுகள் இடம்பெறும்.

கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்கு பெரும்பாலான தரப்பினர் முன்வந்துள்ளனர்.

மேயர் வேட்பாளர் யார் என்பதை ஏனைய கட்சிகளுக்கு அறிவித்திருக்கின்றோம். அதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எமது வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு வழங்குவர் என்று நம்புகின்றோம்.

ரிசா சாரூக் கொழும்பு மாநகரசபையில் 20 ஆண்டுகள் உறுப்பினராக பதவி வகித்திருக்கின்றார். இளம் அனுபவம் மிக்க அவரால் நிச்சயம் கொழும்பை நிர்வகித்துச் செல்ல முடியும்.

 

கொழும்பு மக்களும் அவரை நன்கு அறிவார்கள். உள்ளூராட்சிமன்றங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பிளவுகள் இல்லை. அனைவரும் இணைந்து தான் தலைமைத்துவ பதவிகளில் உள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டும்   என்றார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...