கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளால் வெற்றி

Date:

கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வ்ராய் கெலீ பல்தசார்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதில் கெலி பல்தசார் 61 வாக்குகளையும் ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது. கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

கொழும்பு மாநாகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...