ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர: அரச மரியாதையுடன் வரவேற்பு

Date:

ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

பேர்லினின்  பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மன் முப்படை மரியாதையுடன்  வரவேற்கப்பட்டதுடன்,  முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மையருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...