தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 403 புதிய மாணவர்கள் இணைவு

Date:

(பாறுக் ஷிஹான்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு நேற்று (12) முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு 2023/2024 ஆம் ஆண்டு பரீட்சையில் இருந்து தெரிவான 403 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். குறித்த மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் உணவுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி வரவேற்றது விஷேட அம்ஷமாகும்.

நிகழ்வின்போது மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எவ். பாரிஷா எம் ஹசன் ஆகியோரது பங்குபற்றலுடன் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களிடம் ஒப்படைத்தார்.

திணைக்களங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எம்.பி.எம். இஸ்மாயில், பேராசிரியர் கலாநிதி ஏ.இல்முடீன், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். சபானா ஆகியோர் தாங்கள் சார்ந்த துறைகளில் இணைந்துள்ள மாணவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் மற்றும் குறித்த துறைகளின் ஊடாக மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பில் உரையாற்றினர்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர் சங்க தலைவர் டி.எம்.ஏ.எஸ். தஸநாயக்க புதிய மாணவர்களை வரவேற்றதுடன் சிரேஷ்ட மாணவர்களுடன் இணைந்து தங்களது சிறந்த கற்றல் செயற்ப்பாடுகளை தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதி பதிவாளர் பி.எம். முபீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...