தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் இடைநீக்கம்!

Date:

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  பொறியியல் பீடத்தைச் சேர்ந்த  22 மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...