பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,000 தன்சல்கள் பதிவு

Date:

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.

இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத் தரங்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

பொசன் தினத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்களை  தானசாலைகள ஊடாக வழங்குவது  இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பு – 944, கம்பஹா – 1,792, களுத்துறை – 977, கண்டி – 1,264, மாத்தளை – 812, நுவரெலியா – 352, காலி – 1,186,மாத்தறை – 1,021, அம்பாந்தோட்டை – 533, இரத்னபுரி – 1,097, கேகாலை – 922 ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் விசேட  கவனம் செலுத்தப்படும் எனவும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பொசன்  கொண்டாட்டத்தை உறுதி செய்வதாகவும் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...