நிதி பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும எம்.பி. பதவியை துறந்தார்

Date:

பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் கடிதத்திற்கு அமைய குறித்த பதவி விலகல் இன்று (2025 ஜூன் 20ஆம் திகதி) முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு அமைய, 10ஆவது பாராளுமன்றத்தில் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெருமவின் ஆசனத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (5)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம்தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, அவர் பிரதியமைச்சராக பதவி வகித்த நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினுடைய செயலாளராக அவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வெற்றிடமான குறித்த பதவியில் நியமிக்கப்படப் போவது யார் என்பது குறித்து, தேசிய மக்கள் சக்தி விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Popular

More like this
Related

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...