இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்

Date:

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது,

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானமை தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

விமானத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த துயரத்தால் உயிர்களையும் எதிர்காலத்தையும் இழந்த இளம் மருத்துவ மாணவர்கள் உட்பட, தரையில் உயிரிழந்த பொதுமக்களின் துயரங்களும் அதே அளவு வேதனையளிக்கின்றன.

இந்த ஆழ்ந்த துக்கத்தின் தருணத்தில், இலங்கை மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன – என்று பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...