அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தேவையற்ற உதிரிபாகங்கள், விபத்துகள் நேரும்போது வீதி பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
“2024ஆம் ஆண்டில் மாத்திரம் 815 பேர், குறிப்பாக நடைபயணிகள், வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில், வீதி போக்குவரத்து திணைக்களம் 8,788 வாகனங்களை பொது வீதிகளில் ஓட்டத் தகுதி இல்லாதவை என அடையாளம் கண்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.