போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (24) அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடைசியாக ஒரு தாக்குதலை மேற்கொண்ட பிறகு போர்நிறுத்தம் அறிவிப்பதாக ஈரான் தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.