அக்குரணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் தக்கவைத்துள்ளது.
அதன்படி அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இஸ்திஹார் இமாதுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மேலதிக 3 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவிக்குத் தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார்.
அக்குரணை பிரதேச சபையில் உள்ள 30 உறுப்பினர்களில் ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை, 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தலைவர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாரிக் அலி போட்டியிட்டு 13 வாக்குகளை பெற்றார்.
உப தலைவர் பதவிக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.