இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

Date:

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து, பழுதுபார்ப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் தெரிவித்துள்ளது.

ஜூன் 6 ஆம் திகதி அதிகாலையில் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட இலங்கை தொழில்நுட்பக் குழு, விமானத்தை மதிப்பீடு செய்து பழுதுபார்க்க மேடானுக்கு வந்தது.

 

சிக்கித் தவிக்கும் பயணிகளை அவர்களின் இலக்குக்கு அழைத்துச் செல்ல, ஜூன் 6 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு புறப்படுவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தைத் திட்டமிட்டது.

 

எவ்வாறெனினும், சிக்கித் தவிக்கும் பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட காத்திருப்பு காலம், போதுமான வசதிகள் மற்றும் தெளிவான தகவல் தொடர்பு இல்லாமை குறித்து முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...