ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்: கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடரும் மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு உதவும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வீதிகளில் கலிபோர்னியா பாதுகாப்பு

படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையை, அந்த மாநில ஆளுநர் கெவின் நிவ்சம் சட்டவிரோதமானது என கண்டித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களை பொலிஸார் கைதுசெய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போது அந் நாட்டில் போராட்டங்களில் வெடித்துள்ளன.
லொஸ் ஏஞ்ஜல்ஸ் மக்கள் தொகையில் கணிசமானோர் ஹிஸ்பானிக் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் ட்ரம்பின் தீர்மானத்திற்கமைவாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள்  சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவர்கள் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினரை மீள அழைக்குமாறு கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தலையீடு செய்யும் வரை, தமது பிராந்தியத்தில் பிரச்சினை இருக்கவில்லையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை இறையாண்மை மீதான பாரிய மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அமைதியாக செயற்படுமாறும் கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட...

இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர்...

கட்டுரை: ஹமாஸின் சாணக்கியம்: முஸ்லிம்கள் தெரிய வேண்டியது என்ன?

அஹ்மத் அல்-ரஷீத் அல்ஜஸீராவிலிருந்து.. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று...