இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இலங்கை செவிலியர் காயம்

Date:

தெற்கு இஸ்ரேலின் மிகவும் பரபரப்பான வைத்தியசாலையான சொருகா வைத்தியசாலை, ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை நாங்கள் தற்போது மதிப்பிடுகிறோம். இந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்வதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...