எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 05.30 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை காலை 09.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த விவாதத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் ஒத்தி வைக்கப்பட்ட முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.
எனினும் அந்த முன்மொழிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சபையில் இருக்கவில்லை.
அதன் காரணமாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலியினால் நாடாளுமன்ற அமர்வை நாளை வரை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.