உணவுக்காகக் காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Date:

காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

காசாவில் வாடி பகுதியில்  நேற்று சலா அல்-தின் சாலையில் உதவிப்பொருட்களுடன் வரும் லாரிகளுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் படுகாயமடைந்தனர்.

லாரிகளை நெருங்க மக்கள் ஓடியபோது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த 146 பேரில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும், நுஷ்ரைத் அகதி முகாமில் உள்ள அவ்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினர், டிரோன்கள், மற்றும் பீரங்கிகள் இணைந்து கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

இந்த உயிரிழப்புகள் மூலம் காசாவில் கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 56,000  கடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுமென பரீட்சைகள்...

நாட்டில் பல பகுதிகளில் 75 மி.மீ அதிக பலத்த மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...