ஜூன் 1 உலக காலை உணவு தினத்தையொட்டி, இலங்கைக்கான துருக்கித் தூதரகத்தில் துருக்கி நாட்டின் பாரம்பரிய காலை உணவுகள் மற்றும் சிறப்பு உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.
துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பல்வேறு துறைச்சார்ந்த விருந்தினர்கள் கலந்து கொண்டு துருக்கி கலாசாரத்தின் இனிமை மிகுந்த சுவைகளை அனுபவித்தனர்.
இந்நிகழ்வு, துருக்கியின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டை அறிமுகப்படுத்தும் ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்ததுடன் கலந்து கொண்ட விருந்தினர்கள், துருக்கிய் கலாசாரத்தின் சுவையை உணர்ந்ததுடன்,அந்த நாட்டு உணவுப்பண்பாட்டைப் பற்றி புதிய அனுபவத்தையும் பெற்றனர்.